Skip to main content

ஒழுக்கம்



ஒழுக்கம்​
​ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்​
​உயிரினும் ஓம்பப் படும்.​
​ஒழுக்கமே எல்லோருக்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படும்.​
​ஆம் எல்லாவற்றிலும் முழுமை என்பதே நிறைவு தருவதாக உள்ளது.​
​எல்லா செயல்களூக்குமான முழுமைக்குறிய அடிப்படைகளை நம் முன்னோர்கள் வகுத்ததே ஒழுக்கம். அதுவே அறம்​
​நமக்கு நிகழும் இன்ப ,துன்பம் அனைத்திற்கும் காரணமாக நிற்பதுவும் அதுவே.​
​பெற்றோரின் ஒழுக்கம் பிள்ளைக்கு ​
​ஆசிரியனின் ஒழுக்கம் மாணவனுக்கு ​
​ஒரு தலைவனின் ஒழுக்கம் தொண்டனுக்கு ..​
​என எல்லா ஒழுக்கமும் ஓர் விதியிலேயே அமைகிறது .அந்த விதியும் தனி மனித மாற்றத்திலிருந்தே துவங்குகிறது.​
​எந்த ஒரு தனிமனிதனின் ஒழுக்கமும் ..அவன் சூழலில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் பரவும்.அதுவே நற் குணத்தின் தன்மை.​
​உடல்,மனதின் ஒழுக்கமே உயிருக்கு அடிப்படை​
​உடலின் ஒழுக்கம் :​
​பசி ,தூக்கம் ,ஓய்வு,தாகம்​
​உணவே உடலின் ஒழுக்கத்திற்கு வித்திடுகிறது. ​
​உணவின் விதி 1:​
​நல் உணவென்பது இடத்திலும்,காலத்திலும் விளையும் உணவே.(பருவகால பிரதேச உணவுகள்)​
​உணவின் விதி 2:​
​அந்த உணவு உடலுக்கு ஏற்றுக்கொள்ளக் கூடியதாக (ஒவ்வாமை இல்லா)இருக்கவேண்டும். அனுபவமே இதற்கு பாடம். உடலின் ஒழுக்கம் பேணப்படும்போது நல் உணவுகள் உங்களால் அறியப்படும். ​
​உணவின் விதி 3:​
​மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்​
​வளிமுதலா எண்ணிய மூன்று.​
​அளவு மிகினும் ,குறையினும்​
​சுவை மிகினும் ,குறையினும்​
​நேரம் (வேளை) மிகினும்,குறையினும்​

வளி முதலா எண்ணிய மூன்று என்பது உடலின் வாதம் ,பித்தம், சிலேத்தும் ஆகியவற்றை குறிக்கும் .. மேலே சொன்னது உணவின் தன்மை மட்டுமே..
​உணவின் தன்மை மனதில் எழும் எண்ணத்தின் தன்மைக்கு காரணம்.. ஆகவே நல் உணவு -> நல் உடல்- >நல் மனம்.​
​செயலின் ஒழுக்கம் :​
​சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு​
​ஆக்கம் எவனோ உயிர்க்கு.​
​ஒரு செயலின் அறம் எதுவென்று தெரிந்து செயல்படுவருக்கு அனைத்தும் சிறப்பாகவே நிகழும்.​
​நாம் அன்றாடம் செய்யும் வேலை அந்த நாளின் இறுதியில் ஒரு மன நிறைவைத் தரவேண்டும் .​
​செயலின் ஒழுக்கம் நிதானத்தில் உள்ளது . செயலில் மனதின் நிலையே பிரதானம். எந்த வேலையையும் படபடப்புடன் பொறுமை இன்றி செய்யாதீர்.​
​நிதானம் இன்றி செய்யும் எந்த ஒரு வேலையும் நேர வீணடிப்பே.​
​சமூக ஒழுக்கம் :​
​தனிமனித ஒழுக்கமே சமூக ஒழுக்கம் .ஆனால் தனிமனித செயலின் விளைவு சமூகத்தை பாதிக்காதவாறு இருத்தல் வேண்டும்.​
​ஒழுக்கம் - ஒழுகுதல். மற்றவர்களுடன் மோதாமல் மற்றவர்களுக்குத் தீங்கு நேராமல் நடப்பது-வாழ்வது ஒழுக்கமுடைமை. 'உலகத்தோடு ஒட்ட ஒழுகல்' ஒழுக்கம் என்றும் திருக்குறள் கூறுகிறது.​
​பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - பிறப்பால் அனைவரும் ஒருவரே ..எண்ணம் ,சொல் ..செயல் மூன்றிலும் ஒழுக்கமெனும் அறம் இருக்கும்போது ​
​ஒழுக்கம் ஒரு தொடர் செயல்​
​—தொடரும் ​

Comments

Popular posts from this blog

அறம் விதைப்போம்

அறம் விதைப்போம் அறமெனப்படுவது பிற உயிர்க்கு தீங்கு செய்யாது நல் வழி நடப்பது.. எந்த ஒரு நல்விதையும் விருட்சமாகும் அதை விதைப்பவன் அறம் போற்றினால் .. இது விளையும் இயற்கைக்கும் ..விருத்தியாகும் இனத்திற்கும் பொது விதி.. அப்படி நம் பொறுப்பில் விதிக்கப்ப்பட்டவர்கள்தான் நம் மழலைச் செல்வங்கள்.. ஒரு பெற்றோரின் தலையாய கடமை இளமையில் மழலையின் நெஞ்சில் தனக்கும், சமூகத்திற்குமான அறச் செயல்களைச் செய்யும் வாழ்வியலைக் கற்றுக் கொடுப்பது .. இதை இன்றைய கல்விக்கூடங்கள் கொடுப்பதில்லை.. இதை ஒவ்வொருவரின் தாய்மொழியும் வழி காட்டுகிறது. அந்த தாய்மொழி கொடுக்கும் நல் நூல் நூல்களை கற்று ,வாழ்க்கையில் ஒழுக்கமாக கடை பிடிக்கும் பெற்றோர்களால் மட்டுமே இது சாத்தியப்படும் .. அப்படி அடியெடுத்து வைக்கும் உயிர்கள் முதல் அடியிலேயே வீழ்ந்து விடுவது வழக்க மாகிக்கொண்டிருக்கிறது .. காரணம் எல்லா திசைகளிலும் எழும் எதிர்ப்புகள் ..ஏனென்றால் எது வேண்டாமோ அதுதான் இங்கு அதிகம் எல்லாம் காலப்படி நிலைகளைக் கடந்தே பயனிக்கிறது ..விதை விதைத்த நாளிலேயே மரமாவதில்லை .. விதைப்பும் ,நீரிடலும்,கலையெடுப்பும் ,வளர்ச்சியும்,முதிர்ச்சியும் இயற்கையின் ப