Skip to main content

அறம் விதைப்போம்

அறம் விதைப்போம்

அறமெனப்படுவது பிற உயிர்க்கு தீங்கு செய்யாது நல் வழி நடப்பது..

எந்த ஒரு நல்விதையும் விருட்சமாகும் அதை விதைப்பவன் அறம் போற்றினால் ..

இது விளையும் இயற்கைக்கும் ..விருத்தியாகும் இனத்திற்கும் பொது விதி..

அப்படி நம் பொறுப்பில் விதிக்கப்ப்பட்டவர்கள்தான் நம் மழலைச் செல்வங்கள்..

ஒரு பெற்றோரின் தலையாய கடமை இளமையில் மழலையின் நெஞ்சில் தனக்கும், சமூகத்திற்குமான அறச் செயல்களைச் செய்யும் வாழ்வியலைக் கற்றுக் கொடுப்பது ..

இதை இன்றைய கல்விக்கூடங்கள் கொடுப்பதில்லை..

இதை ஒவ்வொருவரின் தாய்மொழியும் வழி காட்டுகிறது.

அந்த தாய்மொழி கொடுக்கும் நல் நூல் நூல்களை கற்று ,வாழ்க்கையில் ஒழுக்கமாக கடை பிடிக்கும் பெற்றோர்களால் மட்டுமே இது சாத்தியப்படும் ..

அப்படி அடியெடுத்து வைக்கும் உயிர்கள் முதல் அடியிலேயே வீழ்ந்து விடுவது வழக்க மாகிக்கொண்டிருக்கிறது .. காரணம் எல்லா திசைகளிலும் எழும் எதிர்ப்புகள் ..ஏனென்றால் எது வேண்டாமோ அதுதான் இங்கு அதிகம்

எல்லாம் காலப்படி நிலைகளைக் கடந்தே பயனிக்கிறது ..விதை விதைத்த நாளிலேயே மரமாவதில்லை ..

விதைப்பும் ,நீரிடலும்,கலையெடுப்பும் ,வளர்ச்சியும்,முதிர்ச்சியும் இயற்கையின் படி நிலைகள்..

பொறுமை மிக மிக அவசியம் ..பதட்டத்திலும் அவசரத்திலும் செய்யும் வேலை என்றுமே முழுமை பெறுவதில்லை

அப்படித்தான் நல் மாற்றங்களும் ..முதல் எதிர்ப்பைக் கடந்து முன்னேறும் விதைகளே .. முத்தாய்ப்பாய் முழுமை பெறும் ..அந்த மாற்றம் காலத்திற்கும் நிற்கும்..

அப்படி நாம் எதை விதைக்க வேண்டும்?

ஆறறிவிற்க்கான சிறப்பு குணமே வாக்கும் ,மலர்ச்சியும் . ..

வாக்கில் அறமும் ..மலர்ந்த முகமும் மழலைக்கு முதல் விதைகளாம் ..

வாய்மை எனும் உண்மையை பேசுங்கள் அது அவர்களுக்கு கடத்தபப்டும்

உள்ளத்தில் தோன்றும் உண்மையை உரைத்து மலரும் முகம் சங்கடமில்லா உறவுகளை உருவாக்கும்..இதுவே சமூக அறம்..

பொய்களால் சூழ்ந்திருக்கும் சமூக சீரழிவின் இருளை போக்கும் ஒளியே. வாய்மை எனும் உண்மை வழி நடத்தல்..

உண்மை போதிக்கும் தாய் மொழி குழந்தையின் நல் வாழ்வின் உயிர் நாடி என்றால் மிகையில்லை..

அதிலும் தமிழ் மொழி வாழ்வியலுக்கு அர்பணித்திருக்கும் ஆழம் அளவிட முடியாது ..

ஆம் இன்று சமூகம் சந்திக்கும் ஒவ்வொரு சிக்கலின் ஆனிவேரும் நற் செயல்களை போதிக்காததன் அறப் பிறழ்வே ..

அதிலும் இன்று சுதந்திரம் என்று நாம் விதைத்துக்கொண்டிருக்கும் பாதை மிகத்தவறானது..

கண்டிப்பு என்பது அறவரம்பிடும் அரும்பணி .. மடைகட்டாதவன் நீர்பாய்ச்ச முடியாது ..

ஒழுக்கத்தின் சீர்குலைவை அனுமதிக்கும் சமூகம் அழிவிற்கு வித்திடும் என்பது தமிழ் நெறி நூல்கள் சொல்லும் அறக்கூற்று ..

எது அறம் ..ஒழுக்கம் என்பதென்ன என்பதற்கு வழி நடத்தும் பெற்றோர்களும் ,ஆசிரியர்களுமே தடம் மாறும்போது ,கற்றல் நிலையில் இருக்கும் குழந்தைகள் தடம் மாறுவது இயல்பே..

எந்த அடிப்படையும் இல்லாத சமூகம் தடம்மாறலாம் ..நல் வாழ்வியலை இயற்கையோடு போதித்த ஆயிரமாயிரம் ஆண்டு பாரம்பரியம் மிக்க சமூகம் தடம் மாறுவது ஆகப் பெரும் கொடுமை ..

உலகம் என்பது நல்லோர்களின் எண்ணிக்கையையே குறிக்கிறது என்கிறது நம் தமிழ் நூல்கள் ..

ஆம் அந்த சொற்ப எண்ணிக்கையில் இயங்கும் ஒரு சிறிதிலும் சிறிய வீத மக்களாலே இந்த இயற்கை இயங்குகிறது ..ஆகவே நல் மாற்றத்தை நிகழ்த்துவது மிக எளிது ..

வாய்மை எனும் உண்மையை நாம் சுவாசிப்போம் அது நம் குழந்தையின் இருதயங்களுக்கு நல் வளியளிக்கும் ..அவர்களின் வாழ்வெனும் உயிர் இந்த பிரபஞ்சத்தின் தடம் புரளும் அத்தனை உயிர்களின்
இழப்பையும் சரி செய்து வழி நடத்தும் ..

தமிழ் வாழ்வியல் நெறிகளை உலகிற்கு போதித்த உன்னத மொழி ..

அதை கல்லாத வீடும் ..நாடும் வளம்பெறாது ..

பிறர்க்கு தீங்கு இழைக்கா உண்மை பேசுவதே வாழ்வின் அடிப்படை அதை கடைபிடித்து போதியுங்கள்..

உண்மை பேசினால் மலரும் முகம்.. கான்போருக்கு ஒரு தவம்

குழந்தைகள் தவறு செய்வது இல்லை ..சமூகமே அதை விதைக்கிறது ..நல்லதை விதைப்போம்..

என் குழந்தைக்கு நான் எடுத்துக்கொண்டிருக்கும் ..தமிழர் வாழ்வியலின்ஒரு சிறு துளியின் பயணின் வெளிப்பாடே இந்த ஆதங்கம் ..

செல்வங்களை உண்மை பேசும் செல்வந்தர்களாக்குங்கள் ..அதுவே நாம் கொடுக்கும் பெரும் பரிசு ... நன்றி​

Comments

Popular posts from this blog

ஒழுக்கம்

​ ஒழுக்கம்​ ​ ​ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்​ ​உயிரினும் ஓம்பப் படும்.​ ​ ​ஒழுக்கமே எல்லோருக்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படும்.​ ​ ​ஆம் எல்லாவற்றிலும் முழுமை என்பதே நிறைவு தருவதாக உள்ளது.​ ​ ​எல்லா செயல்களூக்குமான முழுமைக்குறிய அடிப்படைகளை நம் முன்னோர்கள் வகுத்ததே ஒழுக்கம். அதுவே அறம்​ ​ ​நமக்கு நிகழும் இன்ப ,துன்பம் அனைத்திற்கும் காரணமாக நிற்பதுவும் அதுவே.​ ​ ​பெற்றோரின் ஒழுக்கம் பிள்ளைக்கு ​ ​ ​ஆசிரியனின் ஒழுக்கம் மாணவனுக்கு ​ ​ ​ஒரு தலைவனின் ஒழுக்கம் தொண்டனுக்கு ..​ ​ ​என எல்லா ஒழுக்கமும் ஓர் விதியிலேயே அமைகிறது .அந்த விதியும் தனி மனித மாற்றத்திலிருந்தே துவங்குகிறது.​ ​ ​எந்த ஒரு தனிமனிதனின் ஒழுக்கமும் ..அவன் சூழலில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் பரவும்.அதுவே நற் குணத்தின் தன்மை.​ ​ ​உடல்,மனதின் ஒழுக்கமே உயிருக்கு அடிப்படை​ ​ ​உடலின் ஒழுக்கம் :​ ​ ​பசி ,தூக்கம் ,ஓய்வு,தாகம்​ ​ ​உணவே உடலின் ஒழுக்கத்திற்கு வித்திடுகிறது. ​ ​ ​உணவின் விதி 1:​ ​ ​நல் உணவென